ரிசல்ட் வந்தாச்சி… அடுத்து காலேஜ்ல எப்போ விண்ணப்பிக்கிறது? – முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பொன்முடி!

ரிசல்ட் வந்தாச்சி… அடுத்து காலேஜ்ல எப்போ விண்ணப்பிக்கிறது? – முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பொன்முடி!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டன.

ரிசல்ட் வந்தாச்சி… அடுத்து காலேஜ்ல எப்போ விண்ணப்பிக்கிறது? – முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பொன்முடி!

மதிப்பெண்கள் குறித்த புகார்களுக்கு மாணவர்களுக்குத் தனி குறை தீர்க்கும் மையம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் கூறியது. சிபிஎஸ்இ 10, 11, 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் விகிதத்தைக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறியிருந்தது. இதையொட்டியே அனைத்து மாநிலங்களும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் என சொல்லப்பட்டது.

ரிசல்ட் வந்தாச்சி… அடுத்து காலேஜ்ல எப்போ விண்ணப்பிக்கிறது? – முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பொன்முடி!

தமிழ்நாடு கிட்டத்தட்ட அதே பாணியில் சற்று வித்தியாசமான முறையில் மதிப்பெண் கணக்கிட்டது. அதன்படி இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தத் தேர்வில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். +2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 22 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித் துறை கூறியிருக்கிறது.

ரிசல்ட் வந்தாச்சி… அடுத்து காலேஜ்ல எப்போ விண்ணப்பிக்கிறது? – முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பொன்முடி!

இச்சூழலில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது என்பதற்கான விளக்கத்தை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதன்படி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு வரும் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்ட் 24ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி தேதி எனவும் அவர் கூறியிருக்கிறார்.