வேல்யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

வேல்யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

வேல்யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான பாஜகவின் வழக்கை வரும் 10 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வேல்யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாஜகவின் வேல் யாத்திரைக்கு காவல்துறை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்துது. மேலும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு சென்றவர்களில் மாஸ்க் போடாதவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை எனவும், முருகனின் அறுபடை வீடுகளுக்கு செல்வதுதான் வேல் யாத்திரை என்றால் முருகன் கோயில்களே இல்லாத வழியில் யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளது ஏன் என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வேல் யாத்திரை குறித்த முழு விவரங்களுடன் கூடிய புதிய மனுவை டிஜிபியிடம் அளிக்கவும், உயர்நீதிமன்றாத்தில் தாக்கல் செய்யவும் பாஜக தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி சத்தியநாராயணா, வழக்கை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.