கொரோனா தொற்று பாதிக்கப்படாத ஆதிவாசிகள் கிராமம்!

 

கொரோனா தொற்று பாதிக்கப்படாத ஆதிவாசிகள் கிராமம்!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நாடெங்கும் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின. ஆனால் கேரள மாநிலம் மூணாறு அடுத்து உள்ள இடம் மலைக்குடி எனும் ஆதிவாசிகள் வாழும் பகுதியில் மட்டும் வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்படுகின்றன. காரணம் அங்கு வாழும் மக்களில் ஒருவர் கூட இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாக வில்லை.

கொரோனா தொற்று பாதிக்கப்படாத ஆதிவாசிகள் கிராமம்!

அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சுமார் 2800 பேர் வசிக்கும் இடம் மலைக்குடி கிராமத்தில் இதுவரை ஒரு நபருக்கு கூட ஏற்படவில்லை. காரணம் அப்பகுதியில் உள்ள அனைவரும் மிக கவனமுடன் இருப்பதுடன், வெளியில் இருந்து யாரும் அந்த பகுதிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவிலேயே ஆதிவாசிகளுக்கு என உருவாக்கப்பட்ட முதல் பஞ்சாயத்து இடம் மலைக்குடி.

இந்நிலையில் நாடெங்கும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப் பட்ட நிலையில் இடமலைகுடி பகுதியில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை இருக்கும் இந்தப் பள்ளியில் மொத்தம் 102 மாணவர்கள் உள்ளனர். 4 ஆசிரியர்களும் 2 தற்காலிக ஆசிரியர்களும் உள்ள இப்பள்ளியில் மாணவர்கள் சமூக இடைவெளியுடனும் பாதுகாப்பு களுடனும் பாடங்கள் கற்று வருகின்றனர்.