“சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

“சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பேசிய போது, “திமுக ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடுபடும் அரசாக விளங்குகிறது; சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம். மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களின் பிரச்னைகளை தீர்க்க நல ஆணையம் அமைக்கப்படும். மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும்.

“சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்க தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் ” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும்” என்றார்.