இந்த ஆண்டுக்கான ஆத்மா நாம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு!

 

இந்த ஆண்டுக்கான ஆத்மா நாம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு!

மறைந்த கவிஞர் ஆத்மாநாம் பெயரில் வழங்கப்படும் இலக்கிய விருகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கவிஞர் ஆத்மா நாம் அறக்கட்டளை ஆத்மா நாம் பெயரில் சிறந்த கவிதைத் தொகுப்புக்கும் சிறந்த மொழிபெயர்ப்பு கவிதை நூலுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான விருது 2017–ஆம் ஆண்டிலிருந்து 2020 ஜனவரி மாதம் வரை வெளியான நேரடி கவிதைத் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்புகளை அனுப்புமாறு கோரியது.

இந்த ஆண்டுக்கான ஆத்மா நாம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு!

பெறப்பட்ட கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளை அவ்வப்போது பட்டியல் இட்டது அறக்கட்டளை. முதலில் 56 தொகுப்புகள் அடங்கிய பட்டியலும் அடுத்து, அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 தொகுப்புகளின் பட்டியலையும் வெளியிட்டது. இறுதியாக, நேரடி கவிதைத் தொகுப்பாக, றாம் சந்தோஷ் எழுதிய சொல் வெளித் தவளை நூலும் மொழிபெயர்ப்புப் பிரிவில் சந்தியா நடராஜன் மொழிபெயர்த்த தாவோ தே ஜிங் நூலுக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான ஆத்மா நாம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு!

தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நூல்களுக்கும் ஆத்மா விருது ஷீல்டும் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் அளிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு வரை பரிசுத் தொகை 50,000 ரூபாயாக இருந்தது. சென்ற ஆண்டு கவிஞர் வெய்யில் மற்றும் சுந்தர் காளி – பரிமளா சுந்தர் இவ்விருதைப் பெற்றனர்.