பேச நிறைய பிரச்சினை இருக்கு… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்க… ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்

பேச நிறைய பிரச்சினை இருக்கு… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்க… ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்

விவசாயிகள் போராட்டம் உள்பட பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டக்கோரி மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் குறுகிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

பேச நிறைய பிரச்சினை இருக்கு… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்க… ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழ்நிலையில் நாடு எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் பல உள்ளன என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தற்போது நடந்து கொண்டு இருக்கும் விவசாயிகள் போராட்டம், கோவிட்-19 தடுப்பூசி தயாரித்தல், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, இந்திய-சீன நிலையில் நிலவும் மோதல் நிலைப்பாடு மற்றும் தடையற்ற யுத்த நிறுத்த மீறல் போன்றவை எல்லாவற்றிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

பேச நிறைய பிரச்சினை இருக்கு… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்க… ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்
ஓம் பிர்லா

ஒரு முழுமையான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலின் தேவை உள்ளது. கோவிட்-19க்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து நாடாளுமன்றத்தின் குறுகிய குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்படலாம். நாட்டை பிடித்திருக்கும் நடப்பு பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்கும், பாராட்டுவதற்கும் இந்த அமர்வு தேசத்துக்கு உதவும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.