மேற்கு வங்க அமைச்சர் மீது வெடிகுண்டு தாக்குதல்… மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை.. காங்கிரஸ் ஆவேசம்

மேற்கு வங்க அமைச்சர் மீது வெடிகுண்டு தாக்குதல்… மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை.. காங்கிரஸ் ஆவேசம்

மேற்கு வங்க அமைச்சர் ஜாகிர் ஹொசைன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை குறிப்பிட்டு அம்மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு இல்லை, யாரும் பாதுகாப்பாக இல்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தொழிலாளர் துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் ஹொசைன். இவர் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவுக்கு ரயிலில் செல்வதற்காக, நிமிதா ரயில் நிலையத்தின உள்ளே செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கி விட்டு தப்பியோடினர். வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்த உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு வங்க அமைச்சர் மீது வெடிகுண்டு தாக்குதல்… மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை.. காங்கிரஸ் ஆவேசம்
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

மேற்கு வங்க அமைச்சர் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்ட சம்பவத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு இல்லை. இந்த மாநிலத்தில் எந்த நபரும் பாதுகாப்பாக இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்க அமைச்சர் மீது வெடிகுண்டு தாக்குதல்… மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை.. காங்கிரஸ் ஆவேசம்
மம்தா பானர்ஜி

அதேசமயம் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், இது அமைச்சர் ஜாகிர் ஹொசைன் மீதான நன்கு திட்டமிட்ட தாக்குதல். இந்த தாக்குதல் ரிமோட் கன்டரோல் வாயிலாக நடத்தப்பட்டதாக சில கூறியுள்ளனர். இது ஒரு சதி. சிலர் (கட்சி) கடந்த சில மாதங்களாக அவர்களுடன் சேருமாறு ஜாகிர் ஹொசையனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். விசாரணை நடந்து கொண்டிருப்பதால் வேறு எதையும் வெளியிட நான் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.