18 வயது சிறுமியை எதிரியாக கருதும் அளவுக்கு நம் நாடு மிகவும் பலவீனமாக இருக்கிறதா?… காங்கிரஸ் தாக்கு

18 வயது சிறுமியை எதிரியாக கருதும் அளவுக்கு நம் நாடு மிகவும் பலவீனமாக இருக்கிறதா?… காங்கிரஸ் தாக்கு

18 வயது சிறுமியை (கிரெட்டா துன்பெர்க்) எதிரியாக கருதப்படும் அளவுக்கு நம் நாடு மிகவும் பலவீனமாக இருக்கிறதா? என்று மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்திரி தாக்கினார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகளின் நடத்தி வரும் போராட்டத்துக்கு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு சர்வதேச பாப் பாடகி ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்டோர் விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். சர்வதேச பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

18 வயது சிறுமியை எதிரியாக கருதும் அளவுக்கு நம் நாடு மிகவும் பலவீனமாக இருக்கிறதா?… காங்கிரஸ் தாக்கு
சச்சின் டெண்டுல்கர்

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் பேசுகையில் கூறியதாவது: டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமர்ந்திருக்கும்போது நாம் அமைதியாக இருக்க முடியாது. 206க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க சாலைகளில் ஆணிகள் நடப்பட்டுள்ளன. குடியரசு தலைவரின் உரைக்கு பின்னர் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

18 வயது சிறுமியை எதிரியாக கருதும் அளவுக்கு நம் நாடு மிகவும் பலவீனமாக இருக்கிறதா?… காங்கிரஸ் தாக்கு
கிரெட்டா துன்பெர்க்

சச்சின் டெண்டுல்கர் மற்றும் லதா மங்கேஷ்கர் போன்ற பிரபலங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக 18 வயது சிறுமியை (கிரெட்டா துன்பெர்க்) எதிரியாக கருதப்படும் அளவுக்கு நம் நாடு மிகவும் பலவீனமாக இருக்கிறதா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.