உங்களால முடியாது.. பேசமா எங்க கட்சிக்கு வந்துருங்க.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.வை அழைத்த காங்கிரஸ்

உங்களால முடியாது.. பேசமா எங்க கட்சிக்கு வந்துருங்க.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.வை அழைத்த காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரசால் பா.ஜ.க.வை தனியாக எதிர்த்து போராட முடியாது, ஆகையால் நீங்க எங்க கட்சியில் சேருங்க என்று மம்தா கட்சி எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பாங்குராவின் ஓண்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பேரணியில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அம்மாநில அமைச்சருமான தபஸ் ராய் பேசுகையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் பா.ஜ.க.வை தடுக்க முடியாது. உங்களது குறைந்து வரும் ஆற்றலால் இது சாத்தியமில்லை என்பதையும் நீங்களும் அறிவீர்கள். அதனால்தான் நீங்கள் இருவரும் ஒன்றாக (கூட்டணி) வந்துள்ளீர்கள். ஆனால் மம்தா பானர்ஜியால் மட்டுமே பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியும் என்று தெரிவித்து இருந்தார்.

உங்களால முடியாது.. பேசமா எங்க கட்சிக்கு வந்துருங்க.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.வை அழைத்த காங்கிரஸ்
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

தபஸ் ராயின் இந்த பேச்சுக்கு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி நக்கலாக பதில் அளித்துள்ளார். சவுத்திரி கூறுகையில், அந்த கருத்தை கூறியவர், திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி காங்கிரஸ்/ இடதுசாரி சேர வேண்டும் என்று அட்வைஸ் செய்கிறேன். ஏனென்றால் பா.ஜ.க.வை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசால் தனியாக போட்டியிட முடியாது என்று தெரிவித்தார்.

உங்களால முடியாது.. பேசமா எங்க கட்சிக்கு வந்துருங்க.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.வை அழைத்த காங்கிரஸ்
திலிப் கோஷ்

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் புரிந்து வைத்திருக்கிறது, பா.ஜ.க.வை தனியாக எதிர்த்து போராடினால் ஜெயிக்க முடியாது. அவர்கள் அனைவரும் (காங்கிரஸ், இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்) இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும். நாங்கள் மேற்கு வங்கத்தில் போராட மற்றும் மாற்றத்தை கொண்டு தயார் என்று தெரிவித்தார்.