நடிகர் அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு!

 

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு!

நடிகர் அதர்வா Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். சாம் ஆண்டன் இயக்கிவரும் இப்படத்தில், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக தயாராகி வருகிறது.

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு சில அறிகுறிகள் இருந்ததையடுத்து நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்துவிடுவேன் என நம்புகிறேன். விரைவில் மீண்டு வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.