வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் மீண்டும் திறப்பு!

 

வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் மீண்டும் திறப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,849பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 89,561பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வருகிறது. அதே போல சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் மீண்டும் திறப்பு!

இதனிடையே பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. அதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல அலுலகங்கள் மூடப்பட்ட நிலையில், வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இ சேவை மற்றும் ஆதார் மையங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த 22 இ சேவை மற்றும் ஆதார் மையங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.