தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவக்குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

 

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவக்குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பதுடன், புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவக்குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது . இதையடுத்து ஜூன் 7ஆம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன . குறிப்பாக மாவட்டங்கள் அனைத்தும் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதில் சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது, இங்கு போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. அதேசமயம் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு ,சேலம், கரூர் ,நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் குறைந்த தளர்வுகளே அளிக்கப்பட்டன.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவக்குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

இந்தநிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 5ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது . இதனால் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசிக்கிறார். அத்துடன் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்து குறைந்த அளவில் செயல்படுத்துவது குறித்தும் என்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவக் வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.