கடன் தவணைக்கு கூடுதல் வட்டியா? – 3 நாளில் முடிவெடுக்க ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கும் சேர்த்து அதிக கடன் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கடன் தவணைக்கு கூடுதல் வட்டியா? – 3 நாளில் முடிவெடுக்க ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!அப்போது எஸ்.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அனைத்து வங்கிகளும் கடன் தவணை உரிய காலத்தில் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டி விதிப்பதைத் தவிர்க்க முடியாது” என்றார்.

கடன் தவணைக்கு கூடுதல் வட்டியா? – 3 நாளில் முடிவெடுக்க ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!அப்போது நீதிபதிகள், “ஏற்கனவே செலுத்த வேண்டிய தவணையில் உள்ள தொகையில் உள்ள வட்டியைக் குறைப்பது பற்றிப் பேசவில்லை. ஊரடங்கு காலத்தில் வசூலிக்க வேண்டாம் என்று கூறப்பட்ட தவணைக்கு வட்டிக்கு வட்டி விதிப்பது பற்றி கவலை கொண்டுள்ளோம். இது குறித்து மூன்று நாட்களுக்குள் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வருகிற புதன் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.