பொருளாதார நிதி நெருக்கடி; சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

 

பொருளாதார நிதி நெருக்கடி; சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு மற்றும் தேவஸ்வம்போர்டு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்ட முடிவவிற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொருளாதார நிதி நெருக்கடி; சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

இதனை அடுத்து, சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலங்களில் தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து 2 ஆயிரமாகவும், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இனி 4,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (02.12.20) முதல் வழக்கம்போல பக்தர்கள் “வெர்ச்சுவல் க்யூ சிஸ்டம்” மூலம் முன்பதிவு செய்து சபரிமலையை தரிசிக்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.