நாளை முதல் அரசு விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 

நாளை முதல் அரசு விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பீதியால் முடக்கப்பட்டிருந்த பேருந்து சேவைகள் கடந்த 1 ஆம் தேதி தொடங்கின. அன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயே பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. அதன்பின் 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பரவலால் 50% பேருந்துகளே இயக்கப்பட்டுவருகின்றன.

நாளை முதல் அரசு விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து தொடங்கப்பட்டதிலிருந்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் கடந்த 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், தினமும் 5 ஆயிரம் பேர் பயணிப்பதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க தினமும் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ள போக்குவரத்துறை, நாளை முதல் கூடுதல் விரைவு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.