விருதுகளுடன் கால்பதித்த வீர மங்கைகள்… மேள தாளத்துடன் வரவேற்பு… நெகிழவைத்த கிராம மக்கள்

 

விருதுகளுடன் கால்பதித்த வீர மங்கைகள்… மேள தாளத்துடன் வரவேற்பு… நெகிழவைத்த கிராம மக்கள்

இளைஞர்களை காப்பாற்றியதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட கல்பனா சாவ்லா விருதுகளுடன் சொந்த ஊர் திரும்பிய வீரமங்கைகளை மேள தாளங்களுடன் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள மருதையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. பள்ளங்கள் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி ஆழமாக இருந்தது. கடந்த 6-ம் தேதி கிரிக்கெட் விளையாடச் சென்ற ரஞ்சித், செந்தில்வேலன், பவித்ரன், கார்த்திக் ஆகியோர் அணை கட்டும் பகுதிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, ஆழமான பகுதியில் 4 பேரும் சிக்கிக் கொண்டனர்.

விருதுகளுடன் கால்பதித்த வீர மங்கைகள்… மேள தாளத்துடன் வரவேற்பு… நெகிழவைத்த கிராம மக்கள்

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு துணி துவைத்துக்கொண்டிருந்த ஆதனூரை சேர்ந்த ஆனந்தவல்லி, செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள் ஆகியோர் ஓடி வந்துள்ளனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இளைஞர்களை காப்பாற்ற தாங்கள் அணிந்திருந்த புடவை கழற்றி இளைஞர்களிடம் வீசினர். செந்தில்வேலனும், கார்த்திக்கும் சேலை பிடித்து உயிர் பிழைத்தனர். பவித்ரன், ரஞ்சித் தண்ணீரினுள் மூழ்கி உயிரிழந்தனர்.

தைரியத்துடனும் துணிச்சலுடனும் செயல்பட்ட இந்த பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்ததோடு மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்தினார். மேலும், அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருதுக்கும் பரிந்துரை செய்தார். இவர்களது வீரதீரச் செயலைப் பாராட்டி சென்னையில் கடந்த 15ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த வீரமங்கைகளுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கி கெளரவித்தார்.

விருதுகளுடன் கால்பதித்த வீர மங்கைகள்… மேள தாளத்துடன் வரவேற்பு… நெகிழவைத்த கிராம மக்கள்

இதையடுத்து விருதுடன் ஊர் திரும்பிய மூன்று பேருக்கும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பால் அந்த பெண்கள் நெகிழ்ந்து போனார்கள்.