ஒடிசா மின் உற்பத்தி பங்குகளில் 49 சதவிகிதம் அதானி கம்பெனிக்கு!

 

ஒடிசா மின் உற்பத்தி பங்குகளில் 49 சதவிகிதம் அதானி கம்பெனிக்கு!

1990 –களில் இந்தியாவில் உலகமயம் தனியார்மயம் அமலுக்கு வந்தது. ஆனால், மிகச் சில நிறுவனங்கள் தனியார் வசம் செல்லாது பார்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால், அடுத்த அடுத்த ஆட்சிக் காலங்களில் ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன.

இந்திய நிறுவனங்கள் தனியார் மயமாவதற்கு எதிர்கட்சிகள் அவ்வப்போது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தாலும் அவற்றை ஆளும் அரசுகள் ஒருபோது பொருட்படுத்துவது இல்லை.

ஒடிசா மின் உற்பத்தி பங்குகளில் 49 சதவிகிதம் அதானி கம்பெனிக்கு!

சமீபத்தில் இந்திய மின் உற்பத்தியில் தனியாரை உள்நுழைக்கப்படும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசு முடிவெடுத்தது. கொரோனா நோய்த் தொற்று பரவும் கடும் நோய்மை மிகுந்த காலகட்டத்தில் இந்த மாதிரியான முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்விகளை எழுப்பினர் முக்கிய எதிர்க்கட்சிகள்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் மின் உற்பத்தியில் தனியாருக்கு குறிப்பிட்ட பங்கு விற்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஒடிசா மின் உற்பத்தி பங்குகளில் 49 சதவிகிதம் அதானி கம்பெனிக்கு!

ஒடிசா மாநிலத்தின் மின் உற்பத்தி நிறுவனத்தின் 49 சதவீத மூலதனப் பங்குகளை அதானி மின்சக்தி நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

இந்த விவகாரத்தில் இது பெரும் விவாதத்தைக் கிளப்பும் எனத் தெரிகிறது. ஏனெனில், இந்திய நிறுவனங்கள் தனியார் மயமாக்கும்போது ஒரு சில தனியார் நிறுவனங்களே லாபம் என்று கூறப்பட்டது. இப்போது ஒடிசாவில் பங்குகள் விற்க அனுமதி கிடைத்திருப்பது அதை உறுதி செய்வதைப் போல் உள்ளது. இனி மற்ற மாநிலங்களில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.