அடம்பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்- தர்ணா போராட்டத்தால் வென்ற இளம்பெண்

 

அடம்பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்- தர்ணா போராட்டத்தால் வென்ற இளம்பெண்

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அடுத்த அயத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிதாஸ். அதிமுக கட்சியை சேர்ந்த இவரது மகன் வினோத் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாலினி என்ற 21 வயது இளம் பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதலுக்கு தேவிதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.

அடம்பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்- தர்ணா போராட்டத்தால் வென்ற இளம்பெண்

இதனால் வினோத் பெற்றோர் சம்மதமில்லாமல் கடந்த மார்ச் மாதம் மாலினியை கோயிலில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். இதன் பின்னர் இருவரும் தனியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தன் தாய் தந்தையை சமாதானம் செய்து அழைத்து செல்கிறேன் என்று மாலினிக்கு வாக்கு கொடுத்துவிட்டு வினோத் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்பின்னர் வினோத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்திருக்கிறது.

மாலினியுடன் வாழ விருப்பமில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி அந்தப் பெண் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் முன்பு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் வினோத் மற்றும் மாலினி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி கணவனின் தந்தையான ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தங்க வைத்து விட்டு சென்றிருக்கின்றனர்.