உயிரிழப்பை ஏற்படுத்தும் சிறுநீரக செயலிழப்பு… அறிகுறிகள் அறிவோம்!

 

உயிரிழப்பை ஏற்படுத்தும் சிறுநீரக செயலிழப்பு… அறிகுறிகள் அறிவோம்!

சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் போவதை அக்யூட் (திடீர்) சிறுநீரக செயலிழப்பு என்று சொல்வார்கள். சிறுநீரகங்களால் நச்சுக்களை வெளியேற்ற முடியாத சூழலில், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கிறது. அது உயிரிழப்பு வரையிலும் கூட கொண்டு செல்லலாம்.

திடீர் சிறுநீரக செயலிழப்பு என்பது ஒரு சில நாட்களில் நடக்கக் கூடியது. அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடனடியாக இதற்கு தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறுநீரக செயலிழப்பு நிலை மாற வாய்ப்புள்ளது.

உயிரிழப்பை ஏற்படுத்தும் சிறுநீரக செயலிழப்பு… அறிகுறிகள் அறிவோம்!

அறிகுறிகள்:

சிறுநீர் அளவு குறைதல், எப்போதாவது சிறுநீர் வெளியேறும். அது இயல்பானது போலத் தெரியும்.

கால், கணுக்கால், பாதங்களில் நீர் கோத்தல்

சுவாசத் திணறல்

சோர்வு

குழப்பமான மனநிலை

குமட்டல்

சீரற்ற இதயத் துடிப்பு

நெஞ்சு வலி அல்லது நெஞ்சில் அதிக அழுத்தம்

தீவிர பாதிப்பு நிலையில் வலிப்பு அல்லது கோமா

சில நேரங்களில் சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் தென்படாமலே இருக்கும். வேறு ஒரு காரணத்துக்காக மருத்துவ பரிசோதனை செய்யும்போதுதான் சிறுநீரக செயலிழப்பு தெரியவரும்.

காரணங்கள்

சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு, வேகம் குறைவது

விபத்துக்களில் சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாயில் காயம் ஏற்பட்டு அடைப்பு ஏற்படுவது.

அதிகப்படியான ரத்த இழப்பு

உயர் ரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள்

மாரடைப்பு

இதய நோய்கள்

நோய்த் தொற்று

கல்லீரல் செயலிழப்பு

வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வது

தீக்காயம்

தீவிர நீரிழப்பு போன்ற காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.

தவிர்க்க என்ன செய்ய வேண்டும்…

திடீர் சிறுநீரக செயலிழப்பை நம்மால் தவிர்க்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது சுய மருத்துவத்தைத் தவிர்க்க வேண்டும். தலைவலி, உடல் வலி என்று சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பு என வேறு ஏதும் பிரச்னை இருந்தால் தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையை நிறுத்தாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

ஆரோக்கியமான, சரிவிகித ஊட்டச்சத்து உணவை உட்கொள்ள வேண்டும். மது அருந்துவதைக் குறைத்துக்கொள்ள அல்லது நிறுத்திவிட வேண்டும். புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.