• April
    03
    Friday

Main Area

Main



கோல்ஃப் விளையாடும் குல்ஃபி நடிகை! ஹைதராபாத் அணியை விலைக்கு வாங்கினார்!

rakul preeth singh
rakul preeth singh

rakul preeth_singh

அந்தக் கால நடிகர், நடிகைகள் எல்லாம் சினிமாவில் சம்பாதித்த பணத்தை திராட்சைத் தோட்டங்கள், ஏலக்காய், தேயிலைத் தோட்டங்கள், கல்யாண மண்டபங்கள் என்று முதலீடு செய்து வந்தார்கள். பின் வெளி மாநிலங்களில் இருந்து வந்த நடிகைகளின் சாமர்த்தியத்தால் இது ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பியது. எல்லா மாநிலங்களிலும் டாப் ஹீரோ, ஹீரோயின்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளன. கோயம்புத்தூரைச் சொந்த ஊராக கொண்டிருக்கும் ஒழுக்க சீலரின் குடும்பத்தில் முதலீடு வேறு ரகம். சூரிய மின் சக்தியை சேமிக்கும் காற்றாலைகள், ஏக்கர் கணக்கில் இடங்கள், அமெரிக்க டாலர்கள், என்று எப்போதும் முதலீடுக்கு பங்கம் வராதளவுக்கு சாமர்த்திய முதலீடுகளாகவும், பெயரைச் சொல்வதற்கு மூன்று தயாரிப்பு நிறுவனங்களாகவும் இருக்கிறது. இப்போதெல்லாம் நடிகைகள் இன்னும் ஸ்மார்ட்டாக முதலீடு செய்கிறார்கள். பிட்காய்ன்கள், படத்தயாரிப்பில் பங்கு தாரர் என்பதை எல்லாம் தாண்டி ஐபிஎல் போன்று விளையாட்டு போட்டியில் விளையாடும் அணிகளை விலைக்கு வாங்குகிறார்கள். 


கிரிக்கெட்டில் இருக்கும் ஐபிஎல் போட்டியைப் போலவே டென்னிஸ் போட்டியை பிரபலப்படுத்தவும், இளம் வீரர்களை இனங்காணும் நோக்கில் 2018ஆம் ஆண்டு டென்னிஸ் ப்ரிமியர் லீக் கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டுக்கான ப்ரிமியர் லீக் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் எட்டு அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டி போடவுள்ளன. ஒவ்வொரு அணியும் வீல் சேரில் டென்னிஸ் ஆடும் வீரர்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

rakul preeth singh


 இந்தாண்டு அணிகளை வாங்குவதற்கான நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில், தமிழின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் கலந்துகொண்டார். இதனையடுத்து, ஹைதராபாத் அணியை விலைக்கு வாங்கினார். பின்னர் பேசிய அவர், ”இந்த லீக்கில் இணைந்துள்ளது மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் எனக்களிக்கிறது. நாட்டில் உள்ள இளம் விளையாட்டு வீரர் வீராங்கனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரே லீக் இது தான்.  என் வாழ்க்கையின் நடிப்பு அத்தியாயம் ஹைதராபாத்தில் தான் தொடங்கியது. அதனால் தான் நான் ஹைதராபாத் அணியை வாங்கினேன். எனது அணியின் பயிற்சியாளராக சானியா மிர்ஷாவும் ஆலோசகராக நரேந்திரநாத்தும் செயல்படவுள்ளனர். நான் ராணுவப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து தெரியும். எனக்கு டென்னிஸ் மிகப் பிடித்த விளையாட்டு. டென்னிஸுக்கு நமது நாட்டு மக்களாகிய நாம் ஊக்கமளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

 

rakul preeth singh

நீங்கள் டென்னிஸ் விளையாடி உள்ளீர்களா என செய்தியாளர்கள் ரகுலிடம் கேட்டதற்கு அவர், “ஆம், சிறுவயதில் நான் டென்னிஸ் விளையாடியிருக்கிறேன். ஆனால், தற்போது கோல்ஃப் தான் விளையாடுகிறேன். தேசிய அளவிலான கோல்ஃப் போட்டியில் நான் பங்கேற்றிருந்தாலும், மாடலிங்கைத் தேர்வு செய்ததால் கோல்ஃப் போட்டியைத் தொடர முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.