ட்விட்டருக்கு வந்தார் அதிமுகவை சேர்ந்த பிரபல நடிகை! முதல் ட்வீட் என்ன தெரியுமா?

 

ட்விட்டருக்கு வந்தார் அதிமுகவை சேர்ந்த பிரபல நடிகை! முதல் ட்வீட் என்ன தெரியுமா?

நடிகை விந்தியா ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். ஆரம்பத்தில் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் தற்போது அதிமுகவின் கொள்கைப்பரப்பு துணை செயலாளராக உள்ளார்.

ட்விட்டருக்கு வந்தார் அதிமுகவை சேர்ந்த பிரபல நடிகை! முதல் ட்வீட் என்ன தெரியுமா?
ட்விட்டருக்கு வந்தார் அதிமுகவை சேர்ந்த பிரபல நடிகை! முதல் ட்வீட் என்ன தெரியுமா?

கடந்த 7 ஆம் தேதியன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் பெண்களுக்கு எந்தவிதமான அவமரியாதையும் இருக்காது. இங்கு எல்லோரும் நன்றாக இருக்கிறோம். பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படும் ஒரே கட்சி அதிமுக என கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகையும், அதிமுகவின் கொள்கைப்பரப்பு துணை செயலாளராருமான நடிகை விந்தியா ட்விட்டரில் இணைந்துள்ளார். தன்னுடைய முதல் ட்வீட்டாக, “மக்களால் நான் மக்களுக்காகவே நான் என வாழ்ந்த என் அம்மாவின் வழியில் அன்பின் வழியில் என் பயணத்தை துவக்குகின்றேன் என் உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிரும் பக்கமாக இந்த டிவிட்டர் பக்கம் இருக்கும்.. இதுவே எனது உண்மையான அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு. நன்றி.” எனக் குறிப்பிட்டிருந்தார்.