ஆர்.கே.நகரில் விந்தியாவை களமிறக்கும் அதிமுக?

 

ஆர்.கே.நகரில் விந்தியாவை களமிறக்கும் அதிமுக?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக, பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகளுக்கு மொத்தமாக 64 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு எஞ்சியுள்ள 170 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது. திமுகவை நேரடியாக களம் காண திட்டமிட்டிருக்கும் அதிமுக, மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளை பெற்ற நட்சித்திர பிரமுகர்களை களமிறக்க முடிவு செய்திருக்கிறது.

ஆர்.கே.நகரில் விந்தியாவை களமிறக்கும் அதிமுக?

அந்த வகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகை விந்தியாவை களமிறக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜெயலலிதா, டிடிவி தினகரன் போட்டியிட்டு வென்ற தொகுதியான ஆர்.கே.நகரை கைப்பற்ற திமுக மற்றும் அமமுக முனைப்பு காட்டி வருகிறது. அதனால், ஜெயலலிதாவை ரோல் மாடலாக கொண்டிருக்கும் விந்தியாவை களமிறக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம்.

ஆர்.கே.நகரில் விந்தியாவை களமிறக்கும் அதிமுக?

ஜெயலலிதா மீது கொண்ட மிகுந்த அன்பினால் அதிமுகவில் இணைந்த நடிகை விந்தியா, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பலர் கட்சி தாவிய நிலையிலும் இதுவரையில் அதிமுகவிலேயே இருக்கிறார். அண்மையில் அவர், அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.