`ஏமாற்றிவிட்டார் சீமான்; மிரட்டினார் ஹரி நாடார்!’ வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

 

`ஏமாற்றிவிட்டார் சீமான்; மிரட்டினார் ஹரி நாடார்!’ வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் கோடம்பாக்கம் வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

`ப்ரண்ட்ஸ்’ படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர், சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று மாலை இவர் தற்கொலைக்கு முயன்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

`ஏமாற்றிவிட்டார் சீமான்; மிரட்டினார் ஹரி நாடார்!’ வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

கூடுதலாக ரத்த அழுத்த மாத்திரைகள் சாப்பிட்டு இவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர் மயக்கநிலையில் சிகிச்சை பெறுகிறார்.

`ஏமாற்றிவிட்டார் சீமான்; மிரட்டினார் ஹரி நாடார்!’ வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக சீமான் மீது பேஸ்புக் லைவ்வில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில், அவருடைய ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காவும்தான் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அந்த எண்ணம் இல்லை. என்னை, ஹரி நாடார் நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறி இழிவாக பேசினார். மேலும், என்னுடைய சாதி குறித்தும் பேசினார். சீமான் மீதும், ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

`ஏமாற்றிவிட்டார் சீமான்; மிரட்டினார் ஹரி நாடார்!’ வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நடிகை விஜயலட்சுமி மயக்கம் தெளிந்த பிறகு, அவரிடம் வாக்குமூலம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.