பிரபல நடிகை வித்யுலேகாவுக்கு திடீர் திருமணம்!

 

பிரபல நடிகை வித்யுலேகாவுக்கு திடீர் திருமணம்!

நடிகை வித்யுலேகா சஞ்சய் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களது திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ்த் திரையுலகில் நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் பிரபல நடிகர் ராமனின் மகள் வித்யூலேகா ராமன். அந்த படத்தை தொடர்ந்து வீரம், புலி, ஜில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் கால்பதித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் அவர் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

பிரபல நடிகை வித்யுலேகாவுக்கு திடீர் திருமணம்!

பப்ளி ஆன லுக்கில் அவரது காமெடி பலரையும் கவர்ந்தது. எனினும், தனது உடல் எடையை வைத்து பலர் கேலி செய்வதாக அண்மையில் வித்யுலேகா கூறியிருந்தார். பின்னர் அதையே உத்வேகமாக எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைத்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகினார்.

பிரபல நடிகை வித்யுலேகாவுக்கு திடீர் திருமணம்!

இதனிடையே, நடிகை வித்யூலேகா ராமனுக்கு சஞ்சய் என்பவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களது சங்கீத் நிகழ்ச்சியின் போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் வித்யூலேகா ராமனுக்கும் சஞ்சய்க்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கொரோனா காலக்கட்டம் என்பதால் அவர்களது திருமணம் எளிமையாக நடந்ததாக தெரிகிறது. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.