#GoBackModi சென்னை வரும் மோடிக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு!

 

#GoBackModi சென்னை வரும் மோடிக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு!

பிரதமர் மோடியின் வருகை குறித்த நடிகை ஓவியாவின் ட்விட்டர் பதிவு பேசும் பொருளாகியுள்ளது.

#GoBackModi சென்னை வரும் மோடிக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வருகிறார். இதனால் சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு விழாவில்கலந்துகொள்ள சென்னை வரும் மோடி, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று, சென்னை, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைக்கிறார். சென்னை வரும் மோடிக்கு அதிமுக – பாஜக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

#GoBackModi சென்னை வரும் மோடிக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு!

இந்த சூழலில் தமிழகத்தை பிரதமர் மோடி நீட் தேர்வு, இந்தி திணிப்பு என பல்வேறு விஷயங்களில் வஞ்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் பிரதமர் மோடி வருகையின் போது டிரெண்டாகும் ஒன்றுதான். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் #Gobackmodi என பதிவிட்டுள்ளார். பொதுவாக மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் குணம் படைத்த ஓவியா அந்த குணாதிசயத்திற்காகவே பலராலும் ரசிக்கப்பட்டார். தற்போது அவர் மோடிக்கு எதிராக பதிவிட்டுள்ள பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது.

இந்த முறையும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 70 நாட்களுக்கு மேலாக நடத்தி வரும் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடி தமிழகம் வருவற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.