• April
    04
    Saturday

Main Area

Main



’இந்த ஜென்மத்துல கல்யாணம் இல்லை பாஸ்’...தனது ஆர்மியின் மீது கண்ணிவெடி வீசிய ஓவியா...

ஓவியா
ஓவியா

மிச்சமிருக்கிற பத்துப் பதினைந்து பேரும் ஓவியா ஆர்மியைக் கலைத்துவிட்டு ரிடையர் ஆவதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம். ஏனெனில் தன் வாழ்நாளில் கல்யாணம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை’என்று அடித்துச் சொல்கிறார் அவர்.

oviya

’களவாணி2’படத்தின் ரிலீஸ் தேதியில் மறுபடியும் குழப்பம் ஏற்பட்டதால் நேற்று இயக்குநர் சற்குணம் வகையறாக்களுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஓவியா. அப்போது அவர் வழக்கத்தைவிட கொஞ்சம் குண்டாகக் காணப்பட்டதால் திருமண குஷியில் இருக்கிறார் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்க,’ எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாண ஆசை கிடையாது பாஸ். அதே மாதிரி ஆண் துணையும் தேவையே இல்லை’என்று நிருபர்கள் மனதை அநியாயத்துக்குப் புண்படுத்தினார்.

oviya

இப்போ தனியா இருக்கிறதுல உள்ள சந்தோஷம் கண்டிப்பா திருமணத்துல இல்லைன்னு எனக்குத் தெரியும். அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்? என்று ஒரு கட்டத்தில் நிருபர்களை நோக்கி எதிர்கேள்வி கேட்க ஆரம்பிக்க, ‘அப்ப அரசியலுக்காவது வருவீங்களா?’என்று கேட்கப்பட்டதற்கு, ‘இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. ஆனா எதிர்காலத்துல என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும். ஒருவேளை அப்ப அரசியலுக்கு வந்தாலும் வருவேன்’என்கிறார்.

சற்குணம் சார் நோட் பண்ணிக்குங்க. ஓவியா அர்சியலுக்கு வர்றதை சப்ஜெக்டா வச்சி கதை பண்ணுங்க. அந்தக் கதைக்கு ‘களவாணி 3’டைட்டில் கனகச்சிதமா இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.