darbar
  • January
    27
    Monday

Main Area

Main



பிக் பாஸ் பைனலுக்கு மதுமிதா போகல ; ஆனா கணவர் போயிருக்காரு: கடுப்பான நெட்டிசன்கள்!

மதுமிதா
மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியின்  இறுதிப் போட்டியில்  மதுமிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில்  அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டது போல் வீடியோ வெளியாகியுள்ளது. 

madhumitha

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நான்கு  போட்டியாளர்கள் தொட்டநிலையில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். இதுவொருபுறமிருக்க பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற சீசன் போட்டியாளர்கள், இந்த சீசனில் எவிக்ட் ஆனவர்கள் என பலரும் வந்து உற்சாகமூட்டினார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சரணவன், மதுமிதா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை. மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். 

 

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்ட நிலையில் மதுமிதா, சரவணனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும் மதுமிதா கணவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டது போல் வீடியோ இன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

 

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதுமிதா, 'நா போகல... எப்படி இது நடந்தது????? என்றும் இது உண்மையா?  program பார்த்தவங்க சொல்லுங்க' என்றும் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் சம்மந்தப்பட்ட சேனலை வறுத்தெடுத்து வருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.