நிரந்தரமாக ‘கை கழுவுங்கள்’! இது மோடியின் பாடம்- குஷ்பு

 

நிரந்தரமாக ‘கை கழுவுங்கள்’! இது மோடியின் பாடம்- குஷ்பு

பாஜக – அதிமுக கூட்டணி உறுதிப்பட தெரிந்த நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று தெரிகிறது. அதிமுக -பாஜக கூட்டணி அமைக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உறுதிப்பட தெரிவித்த நிலையில் சில மாறுபட்ட கருத்துக்களும் இரு வேறு கட்சிகளுக்கு இடையே நிலவி வருகிறது. அதேசமயம் பாஜகவிடம் முதல்வர் வேட்பாளரை பங்கு போட முடியாது என அதிமுக உறுதியாக கூறிவருகிறது. அதிமுகவிடம் பிரச்னையே இருந்தாலும் பாஜக அதிமுகவை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டிருக்கிறது.

நிரந்தரமாக ‘கை கழுவுங்கள்’! இது மோடியின் பாடம்- குஷ்பு

இந்நிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம்
நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம் வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் கூட்டணிகள் மாறும் என்றும் காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.