பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

 

பாஜகவில் இணைந்தார் நடிகை  குஷ்பு

நடிகை குஷ்பு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அதிருப்தியில் இருந்த வந்த குஷ்பு பாஜகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அது வெறும் வதந்தி என்று குஷ்பு மறுப்பு தெரிவித்து வந்தார்.

பாஜகவில் இணைந்தார் நடிகை  குஷ்பு

இந்நிலையில் நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு இன்று மதியம் 1 மணியளவில் வருகை புரிந்தார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜகவில் இணைந்தார் நடிகை  குஷ்பு

இந்நிலையில் நடிகை குஷ்பு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் திமுக , காங்கிரஸ் என கட்சி தாவிய நடிகை குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இணைந்தார் நடிகை  குஷ்பு

முன்னதாக இன்று காலை அவரை காங்கிரஸ் தேசிய தொடர்பாளர் பொறுப்பிலிருந்து கட்சி தலைமை நீக்கியது. இதை தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக நடிகை குஷ்பு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.