Home அரசியல் "Washing Machine குடுப்பாங்களாம்; அப்போ தண்ணி" : நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் மோதல்!!

“Washing Machine குடுப்பாங்களாம்; அப்போ தண்ணி” : நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் மோதல்!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதேசமயம் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகிறது. அதில் அதிமுக தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின் இலவசம் என்று கூறியுள்ளனர். இது சாத்தியமற்றது என்று விமர்சித்து வந்தாலும் அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை , மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"Washing Machine குடுப்பாங்களாம்; அப்போ தண்ணி" : நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் மோதல்!!
kasthuri

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “Washing Machine குடுப்பாங்களாம் ! அதுக்கு தடையில்லாம குழாயில் தண்ணியும் மின்சாரமும் எப்போ குடுப்பாங்களாம் ? அதுக்கும் சேர்த்து தண்ணி டேங்கர் லாரியில் சப்ளை பண்ணுவாங்களா?” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை கண்ட அதிமுக ஆதரவாளர் ஒருவர், “வீட்டு வேலை செய்ய 2, 3 ஆட்கள் வேலைக்கு வைத்திருக்கும் உங்களுக்கு இது தேவையற்றது என்று தானே தோணும். அனைத்து வீட்டு வேலைகளையும் செய்த பின் வேலைக்கு சென்று பொருள் ஈட்டி தன் கணவருக்கு உறுதுணையாய் இருக்கும் பெண்களுக்கு இது அத்யவிசையம். எப்படியும் துணி துவைக்க தண்ணிர் தேவைதானே ?” என்று கஸ்தூரி ட்வீட்க்கு பதிலளித்துள்ளார்.

இதை கண்ட கஸ்தூரி இது உங்கள் கருத்து உண்மை வேறு என்று குறிப்பிட்டு,”என் வீட்டில் பணியாட்கள், சமையல், தோட்டவேலை, டிரைவர் யாருமே கிடையாது. கார் இல்லை. கிரைண்டர், டிவி, 2வீலர் இல்லை.வாஷிங் மெஷினும் பிரிட்ஜும் 20 வருட பழசு. இலவசங்களும் இல்லை. கடந்த வருடம் வரை வருமானமும் இல்லை. இன்றும் தனியொருத்தியாக வீட்டுவேலைகளை கவனித்து விட்டு ஷூட்டிங் செல்கிறேன். 9 to 9 work. சிக்கனமாக வீட்டை நடத்தி என் சம்பாத்தியத்தை தர்ம காரியங்களுக்கு செலவு செயகிறேன்.

தமிழ்நாட்டில் தண்ணீர் Tanker ரில் தான் பல Areaவுக்கு சப்ளை ஆகிறது.
கையால் துணி துவைக்க 2 பக்கெட் தண்ணீர் தேவை. machine க்கு பன்மடங்கு அதிகம். so தண்ணீர் இணைப்பு முதல் அவசியம். உங்களை போன்றோரின் பேராசையை அனைத்து ஏழை மக்களின் அத்தியாவசியம் என்று சித்தரிக்காதீர்கள் ” என்று பொட்டில் அறைந்தாற்போல் பதிலடி கொடுத்துள்ளார்.

"Washing Machine குடுப்பாங்களாம்; அப்போ தண்ணி" : நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் மோதல்!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews