• April
    03
    Friday

Main Area

Main



அட்லீ மீது போலீஸில் புகார் அளித்த துணை நடிகை?!..

அட்லீ - கிருஷ்ணாதேவி
அட்லீ - கிருஷ்ணாதேவி

சென்னை: தளபதி 63 படத்தை இயக்கி வரும் அட்லீ மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் கிருஷ்ணாதேவி எனும் துணை நடிகை.

விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி வரும் படம் தளபதி 63. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெரோப், இந்துஜா, யோகி பாபு, விவேக், தேவதர்ஷினி மற்றும் டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். 

atlee

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் இதில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

atlee

சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அட்லீ மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் கிருஷ்ணாதேவி எனும் துணை நடிகை.

கிருஷ்ணாதேவி

அவர் அளித்த புகார் மனுவில்,  ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் பணிபுரிய வந்தேன். துணை நடிகர்களை மரியாதை இன்றி நடத்துகின்றனர். இதுபற்றி விவாதம் செய்ததற்கு அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகளில் பேசி வேலை செய்ய விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்

அட்லீ தனது உதவியாளர்களிடமும், துணை நடிகர்களிடமும் அதிகமாக கோபப்படுவார் என கோலிவுட் வட்டாரங்கள் முன்பே கிசுகிசுத்து வந்தது. இந்நிலையில் இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு  வந்துள்ளது.

இதையும் படிங்க: #Thalapathy63: ரகசியம் உடைத்த தேவதர்ஷினி?!..

2018 TopTamilNews. All rights reserved.