“திமுக குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, பெரியாரும் தான்” : காயத்ரி ரகுராம் ட்வீட்!

 

“திமுக குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, பெரியாரும் தான்” : காயத்ரி ரகுராம் ட்வீட்!

சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதத்தால் மக்களின் அதிருப்தியை அதிகளவில் சம்பாதித்தார். பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த இவருக்கு தற்போது அக்கட்சியின் கலை, கலாச்சார பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

“திமுக குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, பெரியாரும் தான்” : காயத்ரி ரகுராம் ட்வீட்!

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “பிராமணர்கள் ஆரியர்களாக இருந்தால் அதற்கான ஆதாரங்களை தமிழகத்திற்குக் காட்டுங்கள். அனைத்து சாதி முறையும் 10000 ஆண்டுகள் பழமையானது, ஆரியர்கள் இங்கு பயணம் செய்தபோது 10000ற்கும் அதிகமான வயது இருக்கும்போது நாம் சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறோம். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எங்கிருந்து வருகிறார்கள்? 100 ஆண்டு பொய்கள் 10000 ஆண்டு வரலாற்றை மாற்ற முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/gayathriraguram/status/1288168337495560192

https://twitter.com/gayathriraguram/status/1288169084090105856

அதேபோல் தனது மற்றொரு பதிவில், “திமுக குடும்பம் முதலில் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்தட்டும். திமுக குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, பெரியாரும் தான். இருவரும் தமிழர்கள் அல்ல. குப்பைக் கதைகளால் ஏமாற்றப்படுவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.