பேனர்களால் நடக்கும் உயிரிழப்பால் சினிமாவை ரத்து செய்ய முடியுமா? சூர்யாவுடன் மல்லுகட்டும் காயத்ரி ரகுராம்

பேனர்களால் நடக்கும் உயிரிழப்பால் சினிமாவை ரத்து செய்ய முடியுமா? சூர்யாவுடன் மல்லுகட்டும் காயத்ரி ரகுராம்

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை குறித்து நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பேனர்களால் நடக்கும் உயிரிழப்பால் சினிமாவை ரத்து செய்ய முடியுமா? சூர்யாவுடன் மல்லுகட்டும் காயத்ரி ரகுராம்

அந்த அறிக்கையில், “ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. ஆனால் கொரோனா அச்சத்தில் வீட்டில் இருந்து விசாரணை நடத்தும் நீதிமன்றமோ தேர்வை எழுதுங்கள் என உத்தரவிட்டிருக்கிறது. இன்று நடக்கும் இதே தான் நாளையும் தொடரும். மாணவர்களின் நீட் தேர்வில் தீ வைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்புவோம் என குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றத்தை விமர்சித்த சூர்யாவின் அறிக்கை தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், நடிகை காயத்ரி சூர்யாவின் கருத்துக்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பேனர்களால் நடக்கும் உயிரிழப்பால் சினிமாவை ரத்து செய்ய முடியுமா? சூர்யாவுடன் மல்லுகட்டும் காயத்ரி ரகுராம்

அந்த அறிக்கையில், பிரபலங்கள் நடித்த படங்கள் வெளியாகும் போது பேனர் வைத்து கொண்டாடும் ரசிகர்கள், அந்த பேனர்களாலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இதற்காக சினிமாவுக்கு தடை விதிக்க முடியுமா? இதில் எந்த லாஜிக்கும் இல்லை தானே? என்றும் தேர்வை ரத்து செய்ய சொல்வதற்கு பதிலாக மாணவர்களுக்கு தேர்வெழுத ஊக்கம் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராமின் இந்த அறிக்கைக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். காயத்ரி பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.