“யாரும் யார் முதுகிலும் ஏறி பயணம் செய்ய அவசியமில்லை ” கே.பி.முனுசாமி பேச்சுக்கு கவுதமி பதிலடி!

 

“யாரும் யார் முதுகிலும் ஏறி பயணம் செய்ய அவசியமில்லை ” கே.பி.முனுசாமி பேச்சுக்கு கவுதமி பதிலடி!

கூட்டணி குறித்து தேர்தல் தொடங்கும் வரை எதையும் உறுதியாக கூறமுடியாது என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான கவுதமி தெரிவித்துள்ளார்.

“யாரும் யார் முதுகிலும் ஏறி பயணம் செய்ய அவசியமில்லை ” கே.பி.முனுசாமி பேச்சுக்கு கவுதமி பதிலடி!

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

“யாரும் யார் முதுகிலும் ஏறி பயணம் செய்ய அவசியமில்லை ” கே.பி.முனுசாமி பேச்சுக்கு கவுதமி பதிலடி!

பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறி தான் தேசிய கட்சிகள் பயணம் செய்ய முடியும் . தேர்தலில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அதனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றார்.

“யாரும் யார் முதுகிலும் ஏறி பயணம் செய்ய அவசியமில்லை ” கே.பி.முனுசாமி பேச்சுக்கு கவுதமி பதிலடி!

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக செயற்குழு உறுப்பினர் கவுதமி, “யாரும் யார் முதுகிலும் ஏறி பயணம் செய்ய அவசியமில்லை; தேர்தல் தொடங்கும் வரை எதையும் உறுதியாக கூறமுடியாது என்று கூறினார்.