கமலை பற்றி பேசாதீங்க…அது மார்க்கெட்டிங் தந்திரம் : விளாசும் கவுதமி

 

கமலை பற்றி பேசாதீங்க…அது மார்க்கெட்டிங் தந்திரம் : விளாசும்  கவுதமி

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் மார்க்கெட்டிங் தந்திரத்தை பின்பற்றுகிறது என்று பாஜக நிர்வாகி கவுதமி குற்றம் சாட்டியுள்ளார்.

கமலை பற்றி பேசாதீங்க…அது மார்க்கெட்டிங் தந்திரம் : விளாசும்  கவுதமி

நடிகை கவுதமி கமல் ஹாசனுடன் திருமணமாகாமல் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலை விட்டு பிரிந்தார். இதையடுத்து அரசியலில் களமிறங்கிய கவுதமி, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது கமலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மூலம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கவுதமி, கமல் ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அது நடந்து முடிந்த பிரச்சனை .இனி அதைப் பற்றி பேச வேண்டாம். பாஜக தலைவர்கள் மோடி வாஜ்பாய் உள்ளிட்டவர்கள் மீது அளவுகடந்த மரியாதை உள்ளது. அதனால் கடந்த 23 ஆண்டுகளாக அக்கட்சியின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று கூறுகிறார்கள்.

கமலை பற்றி பேசாதீங்க…அது மார்க்கெட்டிங் தந்திரம் : விளாசும்  கவுதமி

அவர்கள் கொண்டுவரும் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா ?என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.அது வரும் மே2ம் தேதி தெரியவரும். புதிய கட்சி ஆரம்பிக்கும் எல்லோருமே இதுபோல மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று தான் கூறுவார்கள். அந்த வகையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை பின்பற்றுகிறது. மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதால் திமுக வாக்குகள் உடையுமா? என்பது எனக்கு தெரியாது அப்படி பிரிந்தால் அது பாஜக அதிமுக கூட்டணிக்கு தான் சாதகமாக இருக்கும்” என்றார்