காரில் கஞ்சா கடத்தல் : நடிகை மற்றும் டிரைவர் கைது!

இந்த செயலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடி பஸ் நிலையத்தின் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது அப்பகுதியில் வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.  அதில் ஒரு பெண் மற்றும் கார் ஓட்டுநர் இருந்தனர்.  அந்த பெண்ணின் கைப்பையை  சோதித்தபோது அந்த கையில் ஒரு கிலோ மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது
இதையடுத்து அந்த பெண் மற்றும் அந்த கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

இதில் அந்த பெண் சரிதா சலீம் என்பதும் கார் டிரைவரின் பெயர் சுதீர் சரபுதீன் என்பதும் தெரியவந்தது.  சரிதா சலீம்  சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து வந்துள்ளார் மேலும் அவர் மலையாளச் திரைப்படங்களிலும் சில சீரியல்களிலும் துணை நடிகையாக நடித்தது தெரியவந்தது.

சரிதா சலீம் மற்றும் சுதிர் இருவரும்  கேரளாவில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.  இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொருட்களை வாங்கிக்கொண்டு கேரளாவில் அமோகமாக விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செயலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Most Popular

`முகக்கவசம் அணிவதில்லை; அலட்சியமாக இருக்கிறார்கள்!’- திருச்சி மக்கள் மீது ராதாகிருஷ்ணன் வருத்தம்

திருச்சி மற்றும் பல பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் மிக அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று...

“அழகா இருந்த வேலைக்காரி மீது ஆத்திரப்பட்ட முதலாளியம்மா ..” -பொறாமையால் கத்தியால் குத்திய கொடுமை …

பீகாரைச் சேர்ந்த 25 வயதான பிரிதிகுமாரி ராம், கடந்த நான்கு ஆண்டுகளாக அகமதாபாத்தின் வாஸ்னா பகுதியில் சாந்தனு சிங் மற்றும் கல்யாணி தம்பதிகளின் இல்லத்தில் வீட்டு உதவியாளராக வீட்டு வேலைகள் செய்து வந்தார்...

வி.பி.துரைசாமி மூலம் தி.மு.க-வின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டும் எல்.முருகன்!

தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி மூலமாகவே கு.க.செல்வம் பா.ஜ.க-வில் இணைய முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. தென் சென்னை மாவட்டச் செயலாளராக அன்பழகன் இருந்தார். கொரோனா தொற்று காரணமாக அவர் காலமானதைத்...

சென்னையில் 24 கட்டுபாட்டு பகுதிகள் தான் இருக்கின்றன : மாநகராட்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. குறிப்பாக சென்னையில் தான்...