• February
    27
    Thursday

Main Area

Main



இயக்குனரின் ‘கண்டரோல்லில்’ நடிகை… கால்ஷீட் வேணுமா… அவர்கிட்ட கதை சொல்லுங்க!

 நடிகை
நடிகை

நடிகைகள் இப்போதெல்லாம் நடிக்க வரும் போதே மிகத்தெளிவாக இருக்கிறார்கள். யார் யாரிடம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற விபரம் தெரிந்து கொள்கிறார்கள். அப்படி சமீபத்தில் நடிக்க வந்த ‘அதுல்’ நடிகை நடித்து மூன்று படங்கள்தான் வெளியாகி இருக்கிறது. அதற்குள் அந்த இயக்குநரை தன் கைக்குள் போட்டுக்கொண்டு விட்டார். 
 
இயக்குநர் படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் ‘ரொம்ப நல்லவராகவே ’ காட்டப்பட்டிருக்கும். அவரும் நடிகையின் வளர்ச்சியில் பெரிய அக்கறையோடு இருந்து வருகிறார். நடிகைக்கு யார் கதை சொல்ல போனாலும் ‘முதலில் டைரக்டருக்கு சொல்லுங்கள் அவர் நடிக்க சொன்னால்தான் நான் நடிப்பேன்’ என்று  ‘கனி’ வோடு சொல்லி அனுப்பி வைக்கிறாராம். 
 

actress

கதை சொல்லப்போகும் இயக்குநர்கள் மறுபடியும் ‘கனி’வோடு இயக்குநரை சந்தித்து ‘அதுல்’ கதாபாத்திரத்தை பற்றி விளக்குகிறார்கள். அதில் அவருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே கால்ஷீட் கிடைக்கும். ஏதாவது மாற்றம் செய்யும்படி இயக்குநரே சில நேரம் சொல்கிறாராம். 
 
இதனால் அதுல் நடிகைக்கு வரும் வாய்ப்பு தட்டிப்போய்க்கொண்டே இருக்கிறதாம்.  ஆனாலும் இது பற்றி அதுல் நடிகை கவலைபடவில்லையாம் அந்தளவுக்கு நடிகையை ‘கனி’வோடு கவனித்து கொள்கிறாராம் இயக்குநர்!

2018 TopTamilNews. All rights reserved.