அவசர சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும்தான் அலோபதி! ஆனா கொரோனாவுக்கு இதுதான் பெஸ்ட்- நடிகர் விவேக்

 

அவசர சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும்தான் அலோபதி! ஆனா கொரோனாவுக்கு இதுதான் பெஸ்ட்- நடிகர் விவேக்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. கொரோனா பாதிப்புடன் இங்கு வருவோருக்கு கபசுர குடிநீர், மூலிகை டீ , உணவு மற்றும் சளி காய்ச்சலுக்கான மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சித்த மருத்துவர் வீரபாபு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். கொரோனா பாதிப்புடன் வந்த4 நாட்கள் முதல் 10 நாட்களில் சித்த மருத்துவம் மூலம் கொரோனா பாதிப்பு குணப்படுத்தப்படுவது இங்குவருவோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியை ட்விட்டரில் மேற்கோள் காட்டியுள்ள நடிகர் விவேக், “அவசர சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும் அலோபதிதான் இங்கிலீஷ் மருத்துவம் பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளது. ஆனால் இந்த கொரானாவால் நம் பாரம்பரிய வைத்தியமான சித்த மருத்துவத்தின் மகத்துவம் புரிகிறது” என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கும் டேக் செய்துள்ளார்.