திடீர் மாரடைப்பு…நடிகர் விவேக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

 

திடீர் மாரடைப்பு…நடிகர் விவேக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் மாரடைப்பு…நடிகர் விவேக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திடீர் மாரடைப்பு…நடிகர் விவேக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு மூச்சுத்திணறல் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரைத்துறை மட்டுமின்றி மரம் நடுதல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.