நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ? – ஸ்டாலின் இரங்கல்!

 

நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ? – ஸ்டாலின் இரங்கல்!

‘சின்னக் கலைவாணர்’ விவேக் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்ததால் இவர் ‘சின்னக் கலைவானர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். இதுவரை சுமார் 20ஓ படங்களுக்கும் மேலாக நடித்த இவர் 2009-ம் ஆண்டு பத்பஸ்ரீ விருதைப் பெற்றவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.இப்படி பல சிறப்புகளை கொண்டிருந்த இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவேக்கின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என பலரும் இரங்கல் கூறி வருகிறார்கள்.

நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ? – ஸ்டாலின் இரங்கல்!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “சின்ன கலைவாணர் நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர் .தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டிருந்தார் . சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ? அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரை உலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.