ரஜினி – கமல் யாருக்கு ஆதரவு? – நடிகர் விவேக் பளிச் பதில்

 

ரஜினி – கமல் யாருக்கு ஆதரவு? – நடிகர் விவேக் பளிச் பதில்

கோவை

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, கோவை பச்சாபாளையம் பகுதியில் இசை வனம் அமைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சிறுதுளி அமைப்பு மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், நடிகர் விவேக் கலந்துகொண்டு, இசைக்கருவிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மரக்கன்றுகளை நடவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியார் அரசியலுக்கு வருவதை பொதுமக்களில் ஒருவனாக இருந்து பார்ப்பேன் என்றும், மக்கள் விரும்புவர்களுக்கே தனது ஆதரவு என தெரிவித்தார்.

ரஜினி – கமல் யாருக்கு ஆதரவு? – நடிகர் விவேக் பளிச் பதில்

மேலும், ஓ.டி.டி தளங்கள் திடீர் மழை போன்றவை என குறிப்பிட்ட நடிகர் விவேக், மக்கள் எப்போதும் வீட்டில் படங்களை பார்க்க மாட்டார்கள் என்றும், திரையரங்கு செல்வதையே அவர்கள் விரும்பவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் நடிகர், நடிகைகள் மட்டுமல்ல யாருமே தற்கொலை செய்யக்கூடாது என்று கூறிய நடிகர் விவேக், தற்கொலை எண்ணம் தோன்றினால், அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.