#BREAKING: ’78 குண்டுகள் முழங்க’.. காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் தகனம்!

 

#BREAKING: ’78 குண்டுகள் முழங்க’.. காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் தகனம்!

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ ஆபரேஷன் செய்யப்பட்டது. எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவேக் இன்று மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

#BREAKING: ’78 குண்டுகள் முழங்க’.. காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் தகனம்!

தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கு சம்பந்தம் இல்லையென சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், பொதுமக்களும் விவேக்கின் ரசிகர்களும் அதை ஏற்க மறுக்கிறார்கள். தற்போது வரை அதை பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனிடையில், மருத்துவமனையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு விவேக்கின் உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நூற்றுக் கணக்கான பொதுமக்களும் நடிகர்களும் நடிகைகளும் இயக்குநர்களும் அஞ்சலி செலுத்தினர்.

#BREAKING: ’78 குண்டுகள் முழங்க’.. காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் தகனம்!

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் அவரது கலை மற்றும் சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாகவும் காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. இதையடுத்து, மக்கள் புடை சூழ விவேக்கின் உடல் வில்லிவாக்கம் இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், 78 குண்டுகள் முழங்க விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டதோடு 2 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர், தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சின்ன கலைவாணர் விவேக் இம்மண்ணை விட்டு மறைந்தாலும்.. அவர் நடவு செய்த மரங்கள் என்றென்றும் அவரது புகழை தாங்கி நிற்கும். மிஸ் யூ விவேக் சார்…!