பாஜகவின் இணைகிறாரா நடிகர் விஷால்?

 

பாஜகவின் இணைகிறாரா நடிகர் விஷால்?

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளும் கட்சியான சிவசேனாவுக்கும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு இடையே கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு Y+ பாதுகாப்பு வழங்கியது. இதனால் கங்கனாவுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக சிவசேனா தெரிவித்தது. இந்த விவகாரத்தில் நடிகை கங்கனாவின் செயல்பாடுகள் மிகவும் சரியானவை என நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார்.

பாஜகவின் இணைகிறாரா நடிகர் விஷால்?

இந்நிலையில் நடிகர் விஷால் பாஜாகாவில் இணையவுள்ளதாகவும், இதற்காக பாஜக மாநில தலைவர் எல் முருகனை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள விஷாலின் மேலாளர், நடிகர் விஷால் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் வெறும் புரளி மட்டுமே என்றும், சிலர் வேண்டுமென்றே ஊடகங்களில் வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்தார்.