நடிகர் விஷாலுக்கு கொரோனாவா?

 

நடிகர் விஷாலுக்கு கொரோனாவா?

நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தந்தை கிருஷ்ணாவிற்கு முதலில் கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விஷாலுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதன்பின், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள விஷால், தனக்கு எந்தவித பரிசோதனையும் எடுக்கவில்லை, தன்னுடைய தந்தைக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர் ஹரி சங்கர் வீட்டில் இருந்தவாறே ஆயுர்வேத சிகிச்சை அளித்தார் என விளக்கமளித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு கொரோனாவா?

இதனிடையே நடிகர் விஷால், தன் தந்தைக்கு மருந்து வழங்குதல், உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். இந்தநிலையில் நடிகர் விஷாலுக்கு 103 டிகிரி அளவில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயுர்வேத மருத்துவர் ஹரிபிரசாத் உடன் ஆலோசித்த விஷால், வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஆயுர்வேத மருந்தை எடுத்துக்கொண்டார். அதேபோல் அவரின் ரசிகர் மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எனவே இவரும் விஷாலின் தந்தையுடன் தொடர்பில் இருந்ததால் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

நடிகர் விஷாலுக்கு கொரோனாவா?

விஷாலின் தந்தை ஜிகே, நடிகர் விஷால் மற்றும் விஷாலின் ரசிகர் மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன் மூவரும் ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துக்கொண்டனர். விஷாலின் தந்தை ஏற்கனவே குணமடைந்துவிட்டார். அவரை தொடர்ந்து ஆயூர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷால் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோருக்கும் கொரோனா அறிகுறிகள் மறைந்துள்ளன. பரிசோதனை செய்யவில்லை என்றாலும் விஷாலுக்கு கொரோனா இருந்ததாகவே சொல்லப்படுகிறது.