முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!

 

முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், கொரனோ சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு இணங்க பல தனியார் நிறுவனங்களும் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!

அந்த வகையில், நடிகர் விக்ரம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 30 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற மறுநாள் விக்ரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், ஜெயம் ரவி ரூ.10 லட்சம், சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி, ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரூ.1 கோடி, இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் அளித்திருந்தனர்.