darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



'இந்தியன் 2' சீக்ரெட்டை உடைத்த விஜய் சேதுபதி

 விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் வில்லனாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கு வில்லனாக  மாறியுள்ளார். சமீபத்தில்  கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, கமல் சாருடன்  நடிக்க வாய்ப்பு வந்தும் அதை தவறவிட்டுவிட்டேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.

Indian 2

இதையடுத்து சில நாட்களாக விஜய் சேதுபதி இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  இருப்பதாக பரவலாக கூறப்பட்டது. 

kamal

இந்நிலையில் இதுகுறித்து விஜய் சேதுபதி பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்தத் தகவல் உண்மையில்லை. நான் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் சேதுபதி ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

sethupathi

தற்போது தளபதி 64 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ள விஜய் சேதுபதி விரைவில் கமல் ஹாசனுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.