நடிகர் விஜய் பட இயக்குநர் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!

 

நடிகர் விஜய் பட இயக்குநர் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல இயக்குநர் பாபு சிவன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை இயக்கியவர் இயக்குநர் பாபு சிவன். இவர் விஜய்யின் குருவி படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் இயக்குநர் பாபு சிவன் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

நடிகர் விஜய் பட இயக்குநர் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!

இயக்குநர் பாபு சிவனின் மரணச்செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது