• August
    24
    Saturday

Main Area

Main



காஷ்மீர் விவகாரம்: 'அண்டை வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம். ஆளுமை செலுத்தக் கூடாது'; விஜய் சேதுபதி காட்டம்!

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி
Loading...

மெல்போர்ன் : ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மசோதாவை தாக்கல் செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. 

vj

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்குச் சிறந்த நடிகருக்கான விருது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது . இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் வானொலி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அதில், 'ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. பெரியார் இது குறித்து அன்றே பேசிவிட்டார். அண்டை வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம். ஆளுமை செலுத்தக் கூடாது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மனவருத்தத்தைத் தருகிறது' என்றார். 

minister

விஜய் சேதுபதியின் இந்த கருத்து குறித்துப் பதிலளித்துள்ள அமைச்சர் பாண்டியராஜன்,  விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் இந்த விவகாரத்தில் நன்றாகச் சிந்தித்து யோசித்துப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.