• April
    03
    Friday

Main Area

Main



படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை காப்பாற்றிய இளைய தளபதி விஜய்! வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

சென்னை: தன்னை காண வந்த ரசிகர்களை விபத்திலிருந்து நடிகர் விஜய் காப்பாற்றியுள்ளார். 

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் கதிர்,யோகி பாபு,விவேக்,ஆனந்தராஜ்,டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

thalapathy

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு தளத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த வேலியைச் சுற்றிலும் ரசிகர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது விஜய்யை பார்த்து ரசிகர்கள் உற்சாகமானதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த வேலி சரிந்து விழத் தொடங்கியது. அதனைப்பார்த்த விஜய் சற்றும் யோசிக்காமல் வேகமாக சென்று அந்த வேலியைத் தாங்கி பிடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.