மீண்டும் எம்.ஜி.ஆர் கெட்அப்பில் நடிகர் விஜய் போஸ்டர்! – அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு

 

மீண்டும் எம்.ஜி.ஆர் கெட்அப்பில் நடிகர் விஜய் போஸ்டர்! – அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு


எம்.ஜி.ஆர் கெட்அப்பில் நடிகர் விஜய் இருக்கும் போஸ்டரை சென்னையின் பல பகுதிகளில் அவரது ரசிகர்கள் ஒட்டியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களை கொந்தளிப்படைய செய்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர்-ஆகவும் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் போட்டோ எடிட் செய்து போஸ்டர் ஒட்டி அதிர்ச்சி கொடுத்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியதாக செய்தி வந்தது.

மீண்டும் எம்.ஜி.ஆர் கெட்அப்பில் நடிகர் விஜய் போஸ்டர்! – அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு


அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யை விவேகானந்தர் போல ஒட்டி பா.ஜ.க-வினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தினர். ஏற்கனவே நடிகர் விஜய்யை பா.ஜ.க-வினர் விமர்சித்து வரும் நிலையில் இந்த போஸ்டர் மேலும் பிரச்னையை பெரிதாக்கியது. சமூக ஊடகங்களில் நடிகர் விஜய்யை கிழித்து தொங்கவிட்டனர்.
தினம் தினம் இப்படி புதுபுது போஸ்டர்களை ஒட்டி அவரது கவனத்தை கவர ரசிகர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, மீடியாக்களுக்கு நல்ல தீனியாக அமைந்துவிடுகிறது.

மீண்டும் எம்.ஜி.ஆர் கெட்அப்பில் நடிகர் விஜய் போஸ்டர்! – அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு


மதுரையில்தான் விதவிதமான போஸ்டர் அடித்தார்கள் என்றால், அந்த போஸ்டர் கலாச்சாரம் தற்போது கோவை, சென்னை என்று தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சென்னையில் “மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக… ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்?” என்று எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் தொடங்கிய பழைய பட கெட்அப்களில் விஜய் முகத்தை மார்ஃபிங் செய்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

மீண்டும் எம்.ஜி.ஆர் கெட்அப்பில் நடிகர் விஜய் போஸ்டர்! – அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு


தொடர்ந்து எம்.ஜி.ஆர் கெட்அப்களில் விஜய் போஸ்டர் ஒட்டப்படுவதற்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பு இன்னும் என்ன என்ன அலப்பறைகளை எல்லாம் பார்க்க வேண்டி இருக்குமோ என்று பொது மக்கள் தலையில் அடித்துக்கொண்டு செல்கின்றனர்.